இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

அடியேய் அக்கா மகளே
















(ஆண்)
கம்மா கரமேல,
கஞ்சிக்கலயம் சொமந்து,
நொண்டி வாரவளே,
மாமனுக்கு கஞ்சி கெடைக்காதா…??

(பெண்)
உனக்காக
முறுக்குச் சுட்டு,
முந்தானையில
முடுஞ்சுவாரயில,
முள்ளு குத்திடுச்சு மச்சான்…

(ஆண்)
அடி யாத்தே!
பாதயில
பாத்து வரக் கூடாதா??
பாழாபோன
பாதகத்தி…

(ஆண்)
கத்தாழம்பழம்
கடுச்சுருப்ப போலிருக்கு..
சாயம் போகுமுன்னே
கன்னத்திலொரு முத்தங்கொடு…

(பெண்)
குத்த வச்ச அன்னைக்கே
குங்கும பொட்டு வச்சவரே…
குடும்பத்தோடு பேசி,
தாலிச்சரடு கொடு…
தாரமானதும்
தாரேன்னய்யா…

(ஆண்)
அக்கா பெத்த
அன்னக்கிளி!!
ஆசமச்சான் கூப்புடுறேன்…
அணைச்சு கொள்ளடியோய்…

(பெண்)
மீச மிரட்டுதய்யா..
மீனுக்கு தூண்டிபோடுதய்யா…
ஆசைய
அடக்குமச்சான்..
அருவா வச்சுருக்கேன்…

(ஆண்)
குமரிக்குண்டு
குளத்தோரம்
குட்டுவொன்னு இருக்குபுள்ள..
கூத்தடிப்போம் வாடிபுள்ள…

(பெண்)
மணமுடிக்கு முன்னே
மாராப்பு விருச்சா,
மானங்கெட்டு போயிடும்
மச்சான்…

(ஆண்)
ஒன்சோட்டு பொண்ணுகளெல்லாம்,
ஒத்தப்புள்ள பெத்துருச்சு..
ஓடி வாடிபுள்ள…
ஒன்னாகச் சேந்திடலாம்….

(பெண்)
கல்யாணம் முடிக்குமுன்னே,
கர்பமானாக்க,
சாதிசனம் ஏசுமய்யா..
சங்கடம் வேணாமய்யா…

(ஆண்)
மொறச்சு பாக்காத,
மொரண்டு புடிக்காத,
மொறமாமன் கூப்புடுறேன்..
மொச்சக்கொடியோரம்
மொச போல சேந்திடலாம்…

(பெண்)
படிக்காத புள்ளதானே!
படிஞ்சு போவானு
பாத்தியாக்கும்..
பண்பாடு தெரியுமய்யா…
பந்தபோட்டு,
பந்திபோட்ட பின்னே,
பாய விரிப்பேன்னய்யா…

(ஆண்)
சரி,
ஏறுவெயிலு வருதுபுள்ள..
எந்துருச்சு போடிபுள்ள…
ஏருபூட்ட போறேன்புள்ள….
ஏச்சுபுட்டேல?

(பெண்)
ஏய்!!
எகத்தாளம் பேசாதய்யா..
ஏட்டிக்குபூட்டி ஆயிடுமே!!!
பொழப்ப பாருமய்யா..
பொழுசாயம் பேசிக்கலாம்…!!!