பனைமரத்து வெளவாலாய்
கண்ணயராமல் எமை பார்த்து
கரிசனையோடு எமை காத்து
கடமைகள் பல செய்தவரே!
வேண்டியதை எல்லாம்
வேண்டாமலே முன்வந்து
உரிமையோடு தானே
உதவிபல செய்தீர்கள்
பக்கத்தில் நீங்கள் இருந்தீர்களெனில்
பல்லிழிப்பு பல உண்டு
பல கூத்து நாடகந்தான்
மாலை நேர பொழுதை கூட
மாலை சூடிக் கொண்டவர்தான்
மயங்கும் நேரம் வந்தாலே-இனி
மனது என்றும் நினைத்திடுமே
வேலை செய்த களைப்பும்
சிலர் உண்டாக்கிய கடுப்பும்
அந்த மாலை நேரத்திலே
ஆற்றோடு போயிடுமே
நான்கு பேர் குழுதனிலே
நான்கு திசையோடு ஓட
நான் மட்டும் இங்கிருக்க
நாமெல்லாம் சேரும் காலமுண்டு
எங்களுக்களித்த மகிழ்ச்சியை
செல்லுமிடத்திலும் அளிக்க-என்றுமே
மகிழ்வோடு வாழ்க வாழ்கவே!
தலைநகர் நோக்கிய பயணத்தில்
தளராத துணிவோடும்
தணியாத பாசத்தோடும்
தனத்தைப் பெற்றும் வாழ
தமையனின் புன்னகையும்
மெளனமமுமே வாழ்த்துச் சொல்லும்
இலைகள் உதிர்வது
மீண்டும் மரம் தளைப்பதற்கே
இப்போது ஏற்படும் பிரிவானதும்
அன்பு மேலும் அதிகமாவதற்கே!