அரசியல்வாதிகளை
நம்பி நம்பியே
ஏமாந்துபோன தமிழினமே
நம்பியது போதுமடா-இனி
நாம் தானடா போராடவேண்டும்
தமிழா!நீ இல்லையடா வெள்ளாடு
எல்லோரும் சேர்ந்து ஒன்றோடு
வீதியில் இறங்கி போராடு
ஆயுதங்களை மட்டும் தானடா
மெளனிப்பு செய்தோம்
இலட்சியங்களை இல்லவே?
உணர்வுகளை இல்லவே?
அந்நியன் கையில் சிக்கி
அன்னை நிலம் வாடுதடா
பறந்து விரிந்த தமிழினமே
பஞ்சணை சுகம் கண்டு
படுத்துறங்கியது போதுமடா
சேலைக்குள் துளைந்து கொண்டு
முந்தானை வாசனை மட்டுமே நுகர
தமிழன் கோழையும் அல்ல
குழந்தையும் அல்ல
என்பதை காட்டடா
புலம்பெயர் சொந்தங்களே
புழுவாய் துடித்து
நமது சொந்தங்கள் எழுப்பிய
மரண ஓலத்தை
மறந்துவிடலாமோ?
இனத்தின் இழவுக்கு
ஒப்பாரி வைத்தது போதுமடா
ஒன்றிணைந்து ஓங்கி அடிப்போம்
ஒன்றாய் எழுந்து சேரடா
உயிர் நீத்த மாவீரர்களின்
இலட்சியத்தை மனதில் நிறுத்து
நமக்கேனடா என்னும்
அலட்சியத்தை துறத்து
புலிகள் வருவார்கள்
புலிகள் வருவார்கள்
என்ற மாயயை நீக்கு
புலிகளாகி வருவோம்
புலிகளாகி வருவோம்
என்றே ஆக்கு
பாசறைக்குச் சென்று
பயிற்சியினை பெற்றால்தான்
புலிகளோ?
தமிழச்சியின் கற்பில் உதித்தாலும்
தாய்மண் வாசனை நுகர்ந்தாலும்
பச்சிளம் குறுத்தாயினும்
அவனும் புலிதானடா?
