இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

புத்தாண்டு

















ஓராண்டு காலம் 
ஒடுக்கப்பட்டு 
ஒழிய வைக்கப்பட்ட மனம் 
ஒரே நாளில் 
புத்துயிர் பெறும்
புத்தாண்டில் 

கடல் அலைகளாய் 
தோல்வியுண்டு திரும்பிய 
எனது லட்சியங்கள் 
மாண்டு விடவில்லை 
மீண்டும் உயிர்த்தெழும் 
புத்தாண்டில் 

புத்தாண்டுத் திருநாள் 
மேலைநாட்டு இறக்குமதி 
பலருக்கு 
கெட்ட பழக்கங்கள் ஏற்றுமதி 

இனி 
எனது வாழ்க்கையில் 
"குடித்தல்","புகைத்தல்" என்பன 
ஆபாசச் சொற்கள்

அசைவமோ 
அகராதியிலிருந்து 
அகற்றப்பட்ட வார்த்தை 

"காதல்" 
"கல்யாணம்" என்பன
அசிங்கமான 
கெட்ட வார்த்தைகள்

365 தீபங்களை 
அணைத்துவிட்ட
காலத்துக்கு எதிராக 
மீண்டும் கொளுத்துவேன் 
பாசத் தீபங்களை  

என்னை 
பாடாய் 
படுத்திய 
பதினொன்று மறைந்து 
பன்னிரண்டில் தொடரும் 
பாசத்தைத் தேடிய
பயணம் 

சுழலும் பூமியில் 
அன்புதான் அதன்
அச்சாணி 
அன்பை நெஞ்சில் சுமந்து 
இவ்வாண்டு தொடரும் 
எனது பயணம் 

இத்தனை வருடங்கள் 
மண்ணுக்குள் 
மறத்து போய்
மரமாய் புதைந்திருந்த 
எனது மனம் 
இந்த ஆண்டு வைரமாகும்

எனது இதயத்தின் 
ஆர்டிகிள் வென்ட்ரிகிள்
அறைகளை 
அனைவரும் குடியிருக்க 
அனுமதியளிப்பேன் 

சர்ச்சைக்குரிய இறைவா 
எல்லா கஷ்டங்களையும் 
எனக்கு மட்டும் கொடு 
எல்லையில்லா சந்தோசங்களை 
என்னை சுற்றி இருப்பவர்களுக்குக் கொடு

புத்தாண்டில் ஏற்ற அன்புப் பயணம் 
புத்தனாக அல்ல 
புரியாத 
புதிரான வாழ்க்கையில் 
இறந்தும் வாழ 
எனக்கு ஆசை