மேலெறிந்த பந்தே
மேகத்தை முட்டிவிடு
மீண்டும் வந்து-எந்தன்
கைகளில் கிட்டிவிடு
மேகத்திரையே வழிவிடு
நிலவுப் பந்தோடு
விளையாட இடம்கொடு
கோள வடிவம்
பூண்ட பந்தே-நீ
கோள்களின் மாதிரியோ?
பறக்கும் பந்தே
பாறையில்
பட்டெழும்பும் பந்தே-நீ
துள்ளல் ஆட்டமிடும்
கன்று குட்டியோ?
கடலுக்குள் பெய்யும்
மழைத்துளிகளாய்-நீ
மறைந்து போவதில்லையே?
மீண்டெழுந்து-நீரில்
மிதக்கிறாயே?
அலைகளுடன் மட்டும்தான்
விளையாட்டோ?
என்னிடமும் வருவாயோ?
காற்றை உன்னில் அடைத்து
காரியம் சாதித்தானோ மனிதன்
உறங்கி கிடக்கும்
உமது பந்தை எடு
உருட்டி விளையாடு
உருண்டு விளையாடு
உயரே எறிந்து விளையாடு