நீண்டு பாயும் நையில் நதியும்
பரந்து விரிந்த விக்டோரியா ஏரியும்
கொண்டதுவே உகாண்டா
இயற்கை அன்னையில்
அன்புப்பிள்ளை உகாண்டா
சர்வாதிகாரத்தின்
சவலப்பிள்ளை ஒபாடே
சர்வாதிகாரத்தில் தளைத்து
சகலமும் அறிந்தவன் அமின்!
ஒபாடே ஒரு திருட்டுப்பயல்
அவன் வளர்த்த திருட்டுக் கெடா
அமின்! இடி அமின்!
வளர்த்தவன் மாரிலேயே
பாய்ந்தது அக்கெடா
ஒபாடேவின் அட்டூழியங்களை
ஒழிக்க வந்தவனே அமினென்ற
மக்கள் நினைப்பில்
மண் வந்து விழுந்தது
அழிப்பதில் கூட பலவகைகளை
அறிமுகப்படுத்தியவன் -இந்த
அமின்! இடி அமின்!
ஹிட்லரை ஒத்தவன்
மாறிப் பிறந்த மனிதன்
மனித குலத்தின் இழிபிறவி
மனிதனை தின்னும் விலங்கு
அமின்! இடி அமின்!
பாசத் தலைவனுக்கு
பாராட்டுவிழா வென்றி ங்கு
தனக்குத்தானே எடுத்துக்கொள்வது போல்
இவன் தனக்குத் தானே
சூடிக்கொண்ட பட்டங்களும்
குத்துக்கொண்ட பதக்கங்களும்
எண்ணிலடங்கா