இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

மூட நம்பிக்கை

















ஆளும் அரசனாயினும்

ஆண்டவன்முன் செல்வதெனில்-தம்
கிரீடத்தை இறக்கி வைத்தல் வேண்டுமாம்

பாமர மக்கள் கூட

கிரீடம் போலிருக்கும் தலைமுடியை
இறக்கி வைக்க வேண்டுமாம்

கோமாளித்தனம் செய்யும்முன்

கோவில் வாசலில் உள்ள
வறுமையின் வரிசைதனை காணுங்களேன்

இறுகிய தீக்கங்கின் மீது

இறங்கிச் செல்வதும்
சட்டிக்குள் தீ வைத்து
பூ சட்டி எடுப்பதும்
பக்தியின் மகிமையாம்

எங்கே! எங்கே!

என்னிடம் வாருங்கள்

தீக்கங்கை உங்களது

உள்ளங்கையில் கொட்டுகிறேன்
நீறுபூத்த நெருப்பின்மீது
நடக்கச் சொல்கிறேன்
காட்டுங்களேன் மகிமைதனை