இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

எனக்கு காதல் வந்துவிட்டதா?



தினமும் தூக்கத்தை தொலைத்தேன் 
உருண்டும் பிரண்டும் 
எளிதில் பெற்றுவிட முடியவில்லை 
அந்த தூக்கத்தை 

என்னை நானே கட்டாயப்படுத்தி 
எனது மனதுடன் தோற்றுப்போனேன் 
தினமும் கடும் முயற்சிக்கு பின்னே 
தூக்கத்தை பெற்றுவிட முடிகிறது 

ஏன் இப்படி? 
என்ன ஆனது எனக்கு? 
எனக்கு காதல் வந்துவிட்டதா? 

ஆமாம் 
காதல் வந்துவிட்டதுதான் 
காதலி என்பவள் பெண் அல்ல 
காதலி என்பவள் தாய்மண்