அன்று ஒரு நாள்.அது ஒரு அழகான மாலைப் பொழுது. சூரியன் மறைந்துவிட்டான்.இருள் மெதுவாக ஆரம்பமானது.வேழன் தனது ஊரை விட்டு வெளியூரில் தங்கி,தனியாக அவன் ஒருவன் மட்டும் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து வேலைக்குச் சென்று வருவான்.ஒருநாள் அவன் வாழ்க்கையில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி பிறப்பெடுத்த நாள்.ஆம்! அந்நாள் அவன் வழக்கம்போல் வேலைக்குச் சென்று வீட்டுக்கு வந்தான்.உடுப்புக்களை எல்லாம் மாற்றி விட்டு சமையல் அறைக்குச் சென்றான்.காய்கறிகள் குறைவாகவே இருந்தது.வேலை செய்து வந்த களைப்பில் மீண்டும் கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கிவர சலித்துக் கொண்டு இருக்கின்றவற்றை சமைத்தான்.சமைத்து விட்டு சமைத்ததை எல்லாம் எடுத்து வைத்து சாப்பிட அமர்ந்தான்.
அலுவலகத்தில் சில பிரச்சனைகள் என்றபடியால் மனதில் கவலை குடிகொண்டிருந்தது.அதனால் அவனால் சரியாக சாப்பிட முடியவில்லை.முடிந்தவரை சாப்பிட்டு விட்டு மிஞ்சியதை காலையில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என எடுத்து வைத்துவிட்டான்.வழக்கமாக சாப்பிட்டு முடித்ததும் சிறிது நேரம் புத்தகம் படிப்பான்.அன்று ஏனோ அவனது மனது புத்தகத்திலும் செல்லவில்லை.நேரடியாக படுக்கைக்கு உறங்க சென்று விட்டான்.உறக்கமும் சரியாக வரவில்லை.உருண்டு உருண்டு படுத்தான்.அந்த அமைதியான சூழ்நிலையில் குயில் சத்தத்துடன் ஒரு குரலின் சத்தமும் அவனது மனதை தொட்டது.அந்த அழகுக் குரல் எங்கிருந்து வருகிறது என்று தேடினான்.அவனது மனதை நொடிப் பொழுதில் மயக்கிய அந்த குரல் பக்கத்து வீட்டு வானொலியில் இருந்து வருவது சிறிது நேரத்தில் புலப்பட்டது.
அப்படியே படுத்துக் கொண்டே அந்த இனிமைதரும் குரலை பருகிக்கொண்டே அவனை அறியாமல் படுத்துறங்கிவிட்டான்.மறுநாள் அலுவலகம் சென்று வேலை செய்யும் போது முந்தைய நாள் இரவு கேட்ட குரலை மீண்டும் கேட்க அவனது இதயம் துடித்தது.மாலை அலுவலகம் முடிந்ததும் வீட்டுக்குச் செல்லும் நடை வழக்கத்தைவிட அவனை அறியாமல் துரிதமானது.அந்த அளவுக்கு அந்த குரல் அவனை ஈர்த்துவிட்டது.வீட்டுக்கு மாலை ஏழு மணிக்கெல்லாம் சென்று,சென்றவுடன் தன்னிடம் உள்ள வானொலிப் பெட்டியை அழுத்தினான்.ஆனால் அந்த குரல் வரவில்லை.வேறொரு குரல் வந்தது.

மிகுந்த ஏமாற்றம் அவனுக்கு.பின்பு முந்தைய நாள் கேட்ட குரலுக்குச் சொந்தகாரியின் நிகழ்ச்சி இரவு பத்து மணிக்கு என்பதை இடையில் வந்த விளம்பரம் தெரியப்படுத்தியது.பின்பு பத்து மணிக்காக மிகவும் ஏங்கிக் கொண்டு காத்திருந்தான்.அதற்குள் அவனுடைய சமையல்,சாப்பாடு வேலையெல்லாம் முடித்துவிட்டு 9.50மணிக்கு வானொலிக்கு முன் அமர்ந்தான்.பத்து மணி ஆனதும் அவன் மிகவும் எதிர்பார்த்த அந்த வசீகரக்குரல் தனது பெயர் சக்தி என்ற அறிமுகத்தோடு வந்தது.இரு கண்களையும் மூடி அந்த குரலை தன்னுள் உள்வாங்கி மிகவும் ஆழமான இரசனையில் மூழ்கி இருந்தான்.
இது போன்றே சில நாட்கள் கழிந்தன.நாட்கள் செல்ல செல்ல அவனுடைய செயல்களிலும் சில மாற்றங்கள் தென்பட்டன.சமைத்து சாப்பிட்டு முடிந்ததும் குளிப்பான்.குளித்துவிட்டு தன்னை அலங்கரித்துக் கொள்வான்.அடிக்கடி கண்ணாடியிடம் ஏதோ பேசி தானாக சிரிப்பான்.பத்து மணி ஆகும்வரை தன்னை அழகுபடுத்திக் கொண்டே இருப்பான்.பத்து மணி ஆக ஐந்து நிமிடம் முன்பே வானொலிப் பெட்டியின் முன் சென்று அமர்ந்து கொள்வான்.அவளது குரல் ஆரம்பமானதும் அந்த குரலை ரசித்துக்கொண்டே தன்னை அறியாமல் சிரித்துக்கொண்டே இருப்பான்.அந்த நிகழ்ச்சி முடியும்வரை அடிக்கடி வெக்கப்பட்டுக் கொண்டே இருப்பான்.சில நேரங்களில் அந்த வானொலி பெட்டியை கட்டிப்பிடித்து முத்தமிடுவான்.இது போன்று அவனது செயல்கள் நாளுக்கு நாள் தொடந்து கொண்டே இருந்தன.

அவளது குரலை மட்டும் முதலில் காதலித்தவன் இப்போது அவளையும் சேர்த்து காதலிக்கத் தொடங்கிவிட்டான்.எந்த ஒன்றின் மீதும் நமது ஈர்ப்பு அதிகமாக இருந்தால் நம்மை அறியாமலே அதை அடைவதற்கான முயற்சியும் தொடங்கிவிடுகிறது. ஒரு விடுமுறை நாளில் அவளை வானொலியின் கலையகம் சென்று சந்தித்து,அவளது குரலையும் அவளையும் நேரில் கண்டு,அவள் மேலுள்ள தனது காதலை தெரிவிக்க துணிந்துவிட்டான்.அதன்படியே ஞாயற்றுக் கிழமையன்று நன்றாக தன்னை அலங்கரித்து புத்தாடை அணிந்து கொண்டு கிளம்பிவிட்டான்.கலையகம் சென்று விட்டான்.அதன் முன்வாயிலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் பதற்றத்துடன் அமர்ந்தான்.அப்போது சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தனது பேத்திக்கு பத்தாவது பிறந்தநாள் என்று சொல்லி எல்லோருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தாள்.அவனைப் பார்த்ததும் அவனுக்கும் இனிப்பு வழங்கிவிட்டுச் சென்றாள்.சிறிது நேரம் அந்த இனிப்பை சாப்பிட்டுக் கொண்டு காத்திருந்தான்.
அப்போது அவனை தாண்டி கலையகத்தினுள் நுழைய முற்பட்ட ஒரு தொழிற்நுட்ப உதவியாளர் அவனைப் பார்த்து,புதிதாக இருக்கிறானே என்று நினைத்து நீங்கள் யார் என்று கேட்டார்.தன் பெயர் வேழன் என்றும்,தான் சக்தியை பார்க்க வந்ததாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
”ஓ! அப்படியா! அவர் நிகழ்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்.நிகழ்ச்சி முடிந்ததும் அவரை வந்து சந்திக்க சொல்கிறேன்” என்றார் அந்த தொழிற்நுட்ப உதவியாளர்.
”அவர் நிகழ்ச்சி செய்வதை நான் பார்க்கலாமா?” என்று துணிச்சலுடன் அனுமதி கேட்டான்.
“ஓ தாராளமாக வந்து பாருங்கள்” என்று தன்னை பின்தொடரச் சொன்னார்.
அவன் தான் மனதில் வளர்த்து வந்த அவளின் அழகு உருவத்தை,குரலைக் கொண்டு தீட்டிய அந்த குரலோவியத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டே வானத்தில் நடப்பது போன்ற மனநிலையில் நடந்து சென்றான்.அவன் கற்பனையில் தீட்டி வைத்த அந்த குரலோவியத்தை மனம் பார்க்க தவித்தது.அவன் நடந்த அந்த 50 அடி தூரத்தில் ஆயிரம் கற்பனைகள் வந்து போயின.
அவனை அழைத்துவந்த அந்த தொழிற்நுட்ப உதவியாளர் 20 அடி தூரத்தில் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்த ஒரு உருவத்தை காட்டி அவர் தான் சக்தி என்றார்.அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது.அவனுக்கு பேச நா எழவில்லை.எச்சில் விழுங்க முடியவில்லை.கண்ணிமைகள் அசையவில்லை.அவளை பார்த்தும் அதிர்ந்து போனான்.அதிர்ச்சியில் உறைந்து போனான்.அந்த அதிர்ச்சியில் அவன் அப்படியே பித்துபிடித்த நிலையை அடைந்துவிட்டான்.அன்றிலிருந்து இன்றுவரை அவன் மனநிலை பாதிக்கப்பட்டோரின் மருத்துவமனையில் வாழ்ந்து வருகிறான்.அவன் அப்படி பார்த்து அதிர்ச்சி அடைந்த காட்சி என்ன தெரியுமா?அவன் கற்பனையில் தீட்டி வந்த அந்த குரலோவியம் கடைசியில் யாராக இருந்தது தெரியுமா? அவன் வெளியில் அமர்ந்திருக்கும் பொழுது தன் பேத்திக்கு பிறந்தநாள் என்று சொல்லி இனிப்பு கொடுத்தாளே ஒரு பெண்மணி அவள் தான் சக்தி...!

முற்றும்....