கருவாச்சி காவியம் எழுதினாய்
கரைந்துருகினேன் அதில்
சகாத்ய அகாடமி பெற்ற
கள்ளிக்காட்டு இதிகாசம் வடித்தாய்
கண்ணீர் விட்டேன் அதைப்படித்து
இதனால் சகலமாணவர்களுக்குமென்று எழுதினாய்
வியந்தேன்! வியந்தேன்!
கொஞ்சம் தேனீர் நிறைய வானம் என்று
கவிதை தொகுப்பைக் கண்டேன்
கவிதையை படித்து வியந்தேன்
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல என்று
விளம்பரம் கொடுத்த புத்தகம் வாசித்தேன்
அதிலும் மூழ்கி கவி பருகிறேன்
மூன்றாம் உலகப்போரை எழுதினாய்
என் வாழ்க்கை எழுதப்பட்டதாய்
கண்ணீர் வடித்தேன்
”இந்த குளத்தில்கல்லெறிந்தவர்கள்,
என் பழைய பனைஓலைகள்,
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்,
கேள்விகளால் ஓரு வேள்வி,
தண்ணீர் தேசம்,
வடுகப்பட்டி முதல் வால்கா வரை,
வில்லோடு வா நிலவே,
வைகறை மேகங்கள்,”
இன்னும் எத்தனை எத்தனை
உன் படைப்புகளை
தேடித்தேடி வாசித்தேன்
ஆனால்..
தமிழனத் துரோகியை
முத்தமிழறிஞர் என்றாய்-உன்
முகத்தில் காரித் துப்பினேன்
உன் சொம்படிக்கும் படலம்
தொடரும் நிலையை
நான் கண்டு காரிக்காரித் துப்பி
மலர்மாலை தாங்கிய உன்னுடம்பு
என் எச்சில் மாலையைத் தாங்குகிறது
புண்ணாக்குகளின்
புகழ்பாடி
புரவலர்களிடம் பிச்சைக்கு ஏங்கி
உம்மைப் போல் கவி வடிக்கும்
புலவர்கள் அல்ல நாங்கள்
புலிகளின் வீரம் பாடும்
புரட்சிக் கவிஞர்கள் நாங்கள்