இரண்டாயிரத்தி ஒன்பது மே மாதம்
இனவழிப்பின் உச்சகட்டம்
சிவப்பு துண்டணிந்தவனின்
கோர தாண்டவம் அரங்கேற்றம்
தேக்கி வைத்த இனவெறியின்
ஒட்டுமொத்த வெளிப்பாடு
அதில் சிக்கித்தவித்து எழுந்தனவே
எம்மக்களின் கூப்பாடு
நம்மை பார்த்து
மூத்திரம் போவனும்
முந்தானையில் ஒழிந்தவனும்
முதுகில் குத்தியவனும்
எம்மக்களை
ஒன்றாக சேர்ந்தழித்த காலமது
விழுங்கியது வெடித்த குண்டு சத்தங்கள்
மரண ஓலத்தை..
மிஞ்சியது சிந்திய கண்ணீரை
ஓடிய இரத்தம்...
ஆலமரங்கள்
அடியோடு வீழும்போது
நிலம் அதிரவில்லை
அமைதி! அமைதி!
உலக நாடுகளெல்லாம்
அமைதி!
கைக்கெட்டும் தூரம் தமிழகம்
ஆங்காங்கே எழுந்தன அழுதன
எமக்கான குரல்கள்
அடித்து அடக்கிவிட்டன
தீயை அணைத்துவிட்டன
ஆண்ட ஆட்சியாளர்கள்
அழக்கூட அனுமதியில்லையே
ஆர்பாட்டமென்பது எப்படி?
ஆழ்ந்துறங்க நாங்கள்
ஆடிப்பாடின தாலாட்டை
நாடகக்குழுவும் ஊடகங்களும்
எம்மினம் அழிக்கப்பட்ட தருணத்தில்
நீள்துயில் இங்கு இனி
நீண்டுவிடுமோ என்ற பயம்
நித்திரை கலைந்தது-இதோ
நிமிர்ந்துவிட்டது இளையதலைமுறை
மெளனக்காரனெல்லாம்-இங்கு
புரட்சியாளனாகி விட்டன
தெளிந்தது மயக்கம்
கலைந்தது மாணவ மெளனம்
ஊமைக்காரனெல்லாம் -இங்கு
உணர்வுக்கு உரமூட்டி
உள்நெஞ்சில் தீமூட்டி
உரத்து எழுப்புகின்றன
உரிமையின் குரலை
முள்ளிவாய்காலுடன்
முடங்கி விடுமோ
எம்தேசக் கனவு?-இனி
விடுதலையின் கீதம்
ஓங்கி ஓங்காரமிட்டு
ஒலிக்கும் எத்திக்கிலும்
மண்ணுக்காக வீழ்ந்த-எம்
மாவீரர்களின் இலட்சியம்
மண்ணோடு
மக்கி போய்விடவில்லை
காலம் கொடுத்துவிட்டது
விடுதலைப்போராட்டத்தின் கையளிப்பினை
இனி இளையோர் நாம்
காட்டுவோம் நமது பங்களிப்பினை