உணர்வாள கட்சிகளே ஒன்றிணைக
தமிழகத்தின் இருபெரும் மலைகளை
வீழ்த்தியெறிய வேண்டும்
அதன் அடிச்சுவடே தெரியாமல்
அடியோடு துடைத்தெறிய வேண்டும்
அதற்காக ஒன்றிணைக!
அரை நூற்றாண்டு ஆண்டவனை
அந்த ஆண்டவனே ஆதரித்தாலும்
அழித் தொழிக்க வேண்டும்
இனி அவனது ஆட்சியென்பது
இறந்த காலமாக மட்டுமே
இருத்தல் வேண்டும்
இந்துத்துவ கட்சிகளையும்
இல்லாதொழிக்க வேண்டும்
இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள்
இந்துக்கள் என்ற ரீதியில் கூட
இவைகள் குரல் கொடுக்கவில்லை
ஆக,இந்துத்துவ கட்சியென்பது
அவாளுக்கும் அம்பிகளுக்கும் மட்டுமே
தமிழனுக்கு அல்ல
இவ்விரு தேசிய கட்சிகளையும்
இல்லாது ஆக்க வேண்டும்
மாற்று அரசியல் தேவை
மாற்று கூட்டணி தேவை
அதிகாரம் தானே எம்மக்களை
அழித்தொழிக்க உதவியது
அந்த அதிகாரத்தை
அடே தமிழா! நீ கைப்பற்று
எத்தனை நாட்கள்
நீதி கேட்டு போராடுவது?
எத்தனை நாட்கள்
செவிடன் காதில் சங்கை ஊதுவது?
நீயே இனி நீதிபதியாகு!
அடிமையாய் வாழ ஏன்
அடம் பிடிக்கிறாய்?
அதற்கான சந்தர்பத்தை ஏன்
அமைத்துக் கொடுக்கிறாய்?
ஆண்ட இனம் தானே நீ?
அடேய் நமக்குள்
அடித்துக் கொள்வதை விடுத்து
அடிமை விலங்கொடித்து
அதிகாரத்தைக் கைப்பற்று
எல்லோருக்கும்
ஒரே தேசிய தலைவன் தான்
ஒரே இலட்சியம் தான்
பின் ஏன் தயக்கம்?
ஒன்றிணைக! ஒன்றிணைக!
உள்துறையை
உனதாக்கிக் கொள்
உளவுத்துறையும்
உனது வசமாகட்டும்
பாதுகாப்புத் துறையை
பறித்தெடுத்துக் கொள்
வெளியுறவுத் துறையை
விட்டுவிடாதே!
அதுதான் மிக முக்கியம்