இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

பணம்! பணம்! பணம்!
















படிப்பதில் தொடங்கி
பசியாற்றுவது வரை
பணமே முதன்மையடா
பணம் தேடி உள்ளம்
பாழாய் போனதடா

மனித வாழ்கை இப்போ
பணத்தை நோக்கிதானடா
அதில் சொந்தபந்தமென்று
வாழும் பாசம் ஏதடா

பணம் என்றதும்
பல்லிளித்து போவானடா
பகல்கூத்தை நம்பி
பாடையிலே போகாதடா

பதவி வரவேண்டுமென்று
பணம் கொடுத்து செல்வானடா
பதவி வந்த பின்பு நம்மை
பரிதவிக்கச் செய்வானடா

காக்காத கடவுள்களும்
கட்டிய கோவில்களும்
களவாணிகளின் வேலையடா
கண்கட்டி வித்தை செய்து
காசைப் பார்ப்போரை
காரித் துப்பிச் செல்லடா

சாதி மதம் என்பது
தமிழனை பிரித்தாளும் கொள்கையடா
அட! நாம் என்றும் தமிழ்த்தாய்
பெற்றெடுத்த பிள்ளைகளடா

பணத்தை வெறுத்தவனே
மக்களின் மனதை வெல்வானடா
பணத்தாசை பிடித்த அரசியல்வாதியால்
மக்கள் ஏழையாய் ஆவாரடா

வயிற்றை வளர்பவனே
வாழ்க்கை நிலையில்லடா
வாரி வழங்கி - நீ
வறுமை ஒழிய வழிசெய்யடா

தாய்தந்தைக்கு மட்டுமின்றி நீ
தாய் மண்ணுக்கும் உழைத்திட வேண்டுமடா
இன மொழி பற்று அற்றவன்
என்றும் நடைபிணம் தானடா