அரச காலத்தில் மூவேந்தர்களுக்கு
இருந்தாய் நீ சொத்தாய்
சுரணையற்றவர்களை ஏனோ
பின்பு நீ பெத்தாய்?
அதனால் அடுத்தவனிடம்
அகப்பட்டு நீ செத்தாய்
மண்வகை பல கொண்டு
மானமுடன் வாழ்ந்த தமிழ்நாடே
சரித்திரத்தை நீயிழந்து
சாத்திரத்துக்கு எப்படி வழி விட்டாய்?
எம்பாட்டன் வீரமுடன் போராடி
குருதி சிந்தி வீரமுத்தமிட்டு
கட்டிக்காத்து ஆண்டு வந்த
எம்தமிழ்நாடே - நீ
எப்படி அடிமையாகிப்போனாய்?
தமிழர்களாய் நீ பெற்ற
தன்மானப் பிள்ளைகளை
சாதியால் பிரிந்து போக
நீ எப்படி அனுமதித்தாய்?
செத்த குழந்தையையும்
கீறிப் புதைக்கும் குலத்தில்
போராட்டக் குணத்தை மறந்து
போதையில் உன்மக்கள் திரிய - நீ
எப்படி வழிவிட்டாய்?
பெத்தவள் கேவலமென
அடுத்தவள் முலையில் பால்குடிக்க
அடியேய் தாயே - நீ
எப்படி அனுமதித்தாய்?
கங்கை கொண்டும்
கடாரம் வென்றும்
களவாணிகளிடம் சிக்கிக் கொண்ட
மர்மம் தான் என்ன தாயே?
வந்தவனெல்லாம் இங்கு
ஆண்டு விட்டுப் போக
எம் தாய் தமிழ்நாடென்ன
விற்றுப் பிழைக்கும் விபச்சாரியா?
ஐயோ! ஐயோ!
கருமம்! கருமம்!
நெஞ்சம் துடிக்கிறது
இரத்தம் கொதிக்கிறது
இனி இதை அனுமதியோம்
எம்மை ஆழ்பவன்
எம்மவனாக இருத்தல் வேண்டும்
எம்மக்கள் வாழ வேண்டும்