நாடாளுமன்றத்தில் - தன்
நிலைப்பாட்டை
நாடறிய எடுத்துத்துரைத்த
நரைத்த ஒரு ஆட்டை
நம்பிச் சாவோமா இனியும்?
தன்னை அழித்துக் கொண்டு
தானே அழிந்து போய்விட்டார்களென
குப்புறப் படுத்திருந்த
கும்பகர்ணனின்று
உறக்கம் கலையாமல்
உளறித் தொலைக்கிறான்
புரளி மூட்டையை அவிழ்பவர்-சிலர்
புலிகளின் வீரம் பாடி
வஞ்சப் புகழ்ச்சி அணியில்
ஐயா கவி வடித்தாரென்றாலும்
வியப்பதற்கில்லை
மலரவிருக்கும் தமிழீழத்திற்காய்
மாவீரர்கள் பல தந்தோம்
சாதல் என்பது
செத்து விளையாடும் விளையாட்டா?
எங்களுக்கெல்லாம் பைத்தியமா?
ஆமாம்! பைத்தியம் தான்
எம்மண் மீது பைத்தியம்
எம்மக்கள் நலம்மீது பைத்தியம்
ஆனால் இங்கொருவருக்கு
எதன்மீது பைத்தியம் என்று
எமக்குத் தெரியவில்லை
தெளிவு பெறுவோம்
தெளிவு பெற்றால் தான்
விடிவு கிடைக்கும்
கண்ணைக் கசக்கிக் கொண்டு
கையைப் பிசைந்து கொண்டு
எத்தனை நாட்கள் - நாம்
காலம் கழிப்போம்
துரோகிகளைத் துடைத்தெறிந்து
குழப்பவாதிகளைத் தூக்கியெறிந்து
ஒரு இலக்கை கொண்டவரெல்லாம்
ஓரணியில் ஒன்றுசேர்வோம்
அமைப்புக்கள் ஒன்றிணையாமல்
ஆர்பாட்டத்துக்கு ஒன்றுகூடென்பது
அறிவாளித்தனமல்ல
ஒன்றுபட்டு ஒன்றுகூடுவோம்
ஒன்றுபட்டு ஒன்றுகூடுவோம்