பகலில் பதுங்கிவிட்டு
இரவில் என்மீது நடைபழக
முண்டிக் கொண்டு வரும்
மூட்டைப்பூச்சியே
நடைபழகிவிட்டு மட்டும் போ
நீ இழைப்பாற உணவு வேண்டுமா?
எடுத்துக் கொள்
இரத்தமாக தருகிறேன்
எனது உடல் முழுவதும் உள்ளது
எல்லாம் உனக்குத்தான்
ஆனால் ஒன்று
வலிக்காமல் எடுத்துக் கொள்
ஐயோ! வலிக்கிறதே!
தாங்க முடியவில்லையே
நான் பொறுத்துக் கொள்கிறேன்
ஆனால் எனது கையிற்கு
மூளை ஏதோ கட்டளையிடுகிறதே
அதை கரமும் நிறைவேற்றுகிறதே
இறுதியில் உனது மரணம்
ஊர் சுற்றி வரும் கொசுவே
என்மீது அமர்ந்து முத்தமிடுகிறாய்
ஐயோ! காய்ந்து போய் இருக்கிறாய் போல
இவ்வளவு காட்டமாக முத்தமிடுகிறாய்
நோய்களை வாரிவரித்துக் கட்டி
பரப்புவதில் பயப்படமாட்டியாமே நீ
பரவாயில்லை-எனக்கும்
பரப்பி விட்டுச் செல்
கொடுத்த நோயிற்கு பதில்
இரத்தத்தை சம்பளமாக எடுத்து செல்வியாமே?
பரவாயில்லை எடுத்துச் செல்
என்னிடம் நிறைய உள்ளது.
ஆனால் ஒன்று
வலிக்காமல் எடுத்துக் கொள்
ஐயோ! வலிக்கிறதே!
தாங்க முடியவில்லையே
நான் பொறுத்துக் கொள்கிறேன்
ஆனால் எனது கையிற்கு
மூளை ஏதோ கட்டளையிடுகிறதே
அதை கரமும் நிறைவேற்றுகிறதே
இறுதியில் உனது மரணம்
இதற்கு பெயர் அனிச்சை செயலாமே
ஆக! இதை செய்தது நானில்லை
நான் குற்றவாளியில்லை
ஆமாம்!நான் கொலைகாரனும் அல்ல