தாயின் கருவறையில் உதித்து
தாய் மண்ணின் கருவறையில்
உறங்கிவிடத் துடித்தவனே
உணவைத்தான் துறந்து
பேசும் சக்தி இழந்து
மரணத்தின் வாசனை நுகர்ந்து
மண்ணை அணைத்தவனே
களத்தினில் களமாடி
காயம்பட்டு மடிந்தாயோ?
இல்லை! இல்லை!
காய்ந்த வயிற்றோடு
காந்திநாட்டுத் தோலுரிக்க
அகிம்சையின் முகத்திரை கிழிக்க
அண்ணா! மறைந்தாயே!
பசி வந்தாலே
பத்தும் பறக்குமாமே
எத்தனை பறந்தாலும்
உமக்கு கொண்ட இலட்சியம்
பறக்கவில்லையே
ஊரெழு வரை கேட்க
ஊரே சேர்ந்தழுக
உனது செவிக்கு கேட்டதா?
திலீபா! கேட்டுருப்பின்
உனது மனதில் ஓடிய
நினைவு ஓட்டங்கள் என்ன?
நாம் இறந்த பின்னே
நமக்காக யார் யார் அ்ழுவார்கள்
என்று பார்க்கமுடியாது
ஆனால் நீயோ
செத்துக் கொண்டிருக்கும் போதே
உனக்காக கண்ணீர் சிந்திய
கண்கள் பல கண்டவன் நீ!
அண்ணா திலீபா!
நீ கொடுத்து வைத்தவன் தானடா!
நான் மண்ணைப் பார்க்கும் முன்
மடிந்து போனவனே!
இப்போது ஏனடா
கண்களில் கண்ணீர் வருகிறது?
உள்ளம் ஒப்பாரி வைத்து
ஓலமிடுகிறது
உன்னை நாங்கள் ஆழமாக நேசித்ததாலோ?
மாவீரன் மரணித்ததற்கு
மாலையிட்டு வீரவணக்கம்
மட்டுமே செலுத்த வேண்டுமாமே?
கண்ணீர் சிந்த கூடாதாமே?
எப்படி அண்ணா கண்ணீர் சிந்தாமல்
எங்களால் இருக்க முடியும்?
நீ இறந்த இடங்காண
இதயம் துடித்து
இணையத்தின் துணைகொண்டு
வரைபடத்தில் தேடுகிறது.
பதிந்து வைத்துள்ளார்கள்
இன்னும் இருக்கிறது