இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

முகப்புத்தகன்













காதல் பல பேசுவான்
காமப் பித்து கொண்டு
கவர்ச்சிப் படங்கள் பல ஏற்றுவான்

கடலை வறுக்கும் நோக்கோடு
பிற பால் பேசுவதெனில்
பித்துப் பிடித்து அலைவான்

ஒரு வேளை கஞ்சி கூட
அடுத்தவனுக்கு ஊத்தமாட்டான்
ஆளும் சாதி என்பான்
ஆண்ட சாதி என்பான்
ஆண்டு மாண்ட சாதி என்பான்

தமிழனாக பிறந்தும்
தமிழ் பேச மறுப்பான்
தட்டிக் கொடுத்துக் கொண்டு
தாய்மொழியடா என்றாலும்
தரங்கெட்டு முகஞ்சுழிப்பான்

தமிழன் நான் என்பான்
தமிழில் பெயரை எழுதடா என்றால்
அடுத்த மொழி நண்பர்கள் அதிகம் என்பான்
அடைப்பு குறிக்குள்ளே பெயரை
ஆங்கிலத்தில் போடடா என்றால்
அது ஆகாது என்பான்
அது அடங்காது என்பான்

நாமெல்லாம் தமிழர்கள் என்பான்
நமக்கென்று ஒரு தனிநாடு என்பான்
நமக்குள்ளே விவாதம் பலசெய்து
நமக்குள்ளே ஒற்றுமையின்றி
நாய்களாகி போவான்.

கட்சி இதிலேயும் வளர்ப்பான்
களவாணிப்பயலுகளை தலைவன் என்பான்
மாநாட்டுக்கு வா என்பான்
ஏழ்மைக்கு உதவ முன்வர மாட்டான்

ஆக்கப்பூர்வமாகச் சிலர் பேசுவான்
அரட்டை பல அடிப்பான்
அரசியல்வாதிகளை சுமக்கும் பலர்
நாடகக்காரர்களை சுமக்கும் பலர்
அநீதி கண்டு பொங்கும் சிலர்
சேற்றுக்கு மத்தியிலும்
செந்தாமரைகள் இங்குண்டு