தரணி போற்றும்
தமிழினத் தலைவா!
தன்மானத் தலைவா!
தர்மத்தின் தலைவா!
கடவுள் இல்லையென்று
சொல்பவன் நீயே!
அதுவே நீயென்று
மறந்தவனும் நீயே!
திருட்டு ரயிலேறி வந்து
திறமையாக ஆட்சி நடத்தி
உழைப்பால் செல்வந்தரான
எங்களின் முன்னோடியே
வண்டி வராத தண்டவாளத்திலும்
உண்ணாவிரத நாடகத்திலும்
வடிவேலையே மிஞ்சியவரே
நகைச்சுவையின் நாயகரே
எம்மினம் தான் வாட
எப்பதவியும் வேண்டாமென்றே
எறிந்து விட்டே
எக்குலம் காத்தவரே
இடறி விழும் வயதினிலே
ஈழம் காணத் துடிப்பவரே
ஈனப்பிறவிகளை
இடம் கண்டு தாக்கியவரே
தமிழீழம் பெற்றுத்தருவேன் என்னும்
தாரக மந்திரத்தையே
தன்நலம் மறந்தோ
தன்நிலை மறந்தோ
தானாக உச்சரித்து கொண்டு இருப்பவரே
முதலுக்கு மனைவி என்றும்
பிறகுக்கு துணைவி என்றும்
தாரத்துக்கே தனிவிளக்கம்
தந்த தமிழறிஞரே!
எத்தனை பிறப்பெடுத்தாலும்
தமிழனாய் பிறப்பாய்
தலைவனாய் இருப்பாய்
நாங்களும் தமிழனாய் பிறப்போம்
வழக்கம் போல் நம்பிச்சாவோம்