இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

ஆச மச்சானே!
























சுருட்டமுடி வச்சவரே
சுருட்டு புடுச்சுக் குடிப்பவரே
சுள்ளெரும்பு கடுச்சுருச்சு
சுழுக்கு கூட விழுந்துருச்சு
சூச்சமத்த அறியலயா?

மம்புட்டிய தூக்கிக்கிட்டு
மாடுபுடுச்சு போறவரே
மறப்புக்குள்ள நானிருந்து
மச்சானே! ஒன் மனச
மடக்கிவிட பாக்குறனே

கொழுத்தும் வெயிலோட
கொட்டும் வேர்வையோட
கொலுவால கோலம் போடுறவரே
கொலுசு சத்தங்கேட்டு
கொக்கு எல்லாம் பறந்திடுதே
கொமரன் பார்வ திரும்பலயே

பொழப்ப பாத்து
பொழுசாயத்துல
பொற முதுகு காட்டி
பொடி நடயாக போற
பொச கெட்டவரே
பெராக்கு பாத்து
பெண்புள்ளய காணுமய்யா

மனசெல்லாம் நெறஞ்சவரே
மஞ்சலிட்டு குளிக்கிறவ
மார்கழியில மாலையிட
மணப்பெண்ணா காத்திருக்கேன்

மாரியாத்த திருவிழாவுக்கு
மறப்புக்குள்ள கூட்டிப்போய்
மல்லிகப்பூ வச்சுவிட்டவரே
மாமனாரோட கூடிப்பேசி
மஞ்சக்கயிறு எப்போது?

ஈச்சாம் பழமிருக்க
இழுத்து நீ புடுங்கி
இருடி புள்ளயென
இந்தானு நீ ஊட்ட
இருட்டு பொழுதுன்னு
இடுப்ப நீ பிடிக்க
இருளாண்டி கெழவன் பார்க்க
இழுத்தடுச்சு ஓடியத
இப்ப எண்ணி சிரிக்கிறேனய்யா

கொடிக் கள்ளியோரமா
கொமரா! நாமொதுங்கி
கொண்ட ஊசியெடுத்து
கொஞ்சி பேரெழுதி
கொழஞ்சு இதயம் வரஞ்து
கொஞ்சமும் மறையாதய்யா

வெள்ளவேட்டி கட்டிக்கிட்டு
வெரசா நடந்துக்கிட்டு
வெளியூரு போறவரே
வெவரத்த நா(ன்) கேட்டாக்க
வேக்காணம் பேசிப்புட்டு
வெந்தபுண்ணா நானிருக்க
வேலுக்கம்ப பாச்சாதய்யா