தமிழனே! நீ கேளடா என்பாட்டை
எதிரி வெடிவைத்து கலைத்தானே உன்கூட்டை
பூண்டோடு அழித்தானே பனைமரக்காட்டை
டெல்லியும் அடக்கிவைத்தான் தமிழ்நாட்டை
இன்னும் அடங்களடா அவன் சேட்டை
எடுத்து நீ வாடா உன்சாட்டை
மடிந்து போனால்
மறந்தா போவோம்?
மாண்டு போனால்
மீண்டும் எழுவோம்
பயணத்தை பாதியில் விட்டு
பல்லிழித்தா போவோம்?
பரந்த உலகிற்கு
பறைசாற்றிச் சொல்வோம்
எமது நிலம் எமக்கென்று
பஞ்சணை சுகம் கண்டு
படுத்தா கிடப்போம்?
பின்பு வந்து
பிடரியில் அடிப்போம்
உதிர்ந்து போனால்
உயராமலா போவோம்?
வீழ்ந்து போனால்
எழாமலா போவோம்
மெளனித்து போனால்
மண்மனம் மறந்தா போவோம்?
பதுங்கி போனால்
பயந்தா போவோம்?
பாயும் புலிதான்
பாய்ச்சல் உண்டு
நத்தைக் கூட்டை
விட்டுப் பிரிந்தோம்
புலத்தில் இருந்து
புலம்பித் தவித்தோம்
ஈன்ற பிள்ளையிடமும்
ஈழம் உனதென்றே
சொல்லி வளர்ப்போம்
இடம்பெயர்ந்து போனால்
இடரியா போவோம்
இலட்சியம் காப்போம்
புலத்துப்புலியாய்
பொங்கி எழுவோம்
பிடித்த(விரும்பிய) மண்ணை
பிடிக்க வருவோம்
பயிற்சி கொண்டு
பாய்ந்து வருவோம்
நாளை வந்து
நாட்டை ஆள்வோம்