காவி உடை அணிந்து
நெற்றியில் பட்டையிட்டு
கடவுளை வணங்கினேன்!
கருப்பு சட்டை அணிந்து
கடவுளை வெறுத்தேன்!
இரண்டுமே எனக்காக அல்ல!
யார் யாரோ சொல்லி செய்தேன்!
என் மனமோ,
இரட்டை கோணத்தில் பார்க்கிறது!
ஒன்றை தேர்ந்தெடுக்க மறுக்கிறது!
ஆனால் ஒன்று மட்டும்
உச்சியில் உரைக்கிறது!
இருக்கிறதா?இல்லையா?
என தெரியாத கடவுளுக்கே
நூற்றிஎட்டு, ஆயிரத்தி எட்டு
துதி பாடும் போது,
இருக்கிற மனிதனுக்கு
ஏன் துதிபாட மறுக்கிறோம் என்று!
நானும் கடவுள்பக்தியுடன்
கக்கித்தான் பார்த்தேன்!
வாந்திதான் வந்தது!
லிங்கம் வரவில்லையே!
ஐயோ!
கஞ்சா இழுப்பவன் கடவுளாம்!
காவி கட்டுபவன் பக்தனாம்!
எழுதுங்கள்
எனது கல்லறையில்,
அமரர் சரவணகுமார் என்று!
தெய்வத்திரு சரவணகுமார் என்றல்ல….!