இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

தீயினில் எரியாத தீபம்
















உள்ளத்தை இறுக்கி
உடலைக் கருக்கி
எங்களை உருக்கி
விட்டுச் சென்றாயே

உலகத்தின் துரோகத்தைக் கண்டு
உனக்குள் அதை மென்று
தீயை நீ தின்று
ஆயுளை மனம் வென்று
அதட்டி உசுப்பி விட்டுச் சென்றாயே

உள்ளக் குமறலைத் தேக்கி
ஐக்கிய நாடுகள் சபை நோக்கி
நீதியின் கொடியைத் தூக்கி
உடலை தீ ஆக்கி
உலகை விட்டு நீ சென்றாயே

உள்ளத்தை நோகவிட்டு
உடலை நீ வேகவிட்டு
உறங்கிக் கிடந்தோரை எழுப்பிவிட்டு
உருக்குலைய வைத்துவிட்டு
உருகிக் காற்றில் கரைந்தாயே

ஆற்றுவோம் பங்கை
ஒற்றுமை எங்கே
விடுதலை அங்கே
என்றே எடுத்துரைத்தாயே

இலையுதிர்ந்த மரம்தானே
முளைத்துத் தளிர்விடும் பின்னாளே
ஆணிவேர் என்றும் வலிமையுண்டு
எடுத்துச் சொல்வோம் நாம் யாரென்று

ஆண்டுக்கொரு முறை நினைவேந்தல்
ஆளுக்கொரு மாலை உன்படத்திற்கு
அழுது தொலைத்து விட்டு
அடுத்த வேலைக்கா செல்வோம்?

விட்டுச் சென்ற இடத்திலிருந்து
விடுதலையை நோக்கி
விரைவாக செயற்படுவோம்
ஒற்றுமையாக செயற்படுவோம்