இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

மண்ணை நேசித்த மாவீரர்கள் நீங்களே











கார்த்திகை இருப்பத்தியேழில்
கரிகாலன் கையின் சுகம் காண
கல்லறைக்குள் உறங்க துடித்த
ஈழத்தாயின் குழந்தைகளே!

பயிற்சியின் தேவைதனை உணர்ந்து
பாசறைக்குச் சென்றும்
பாசத்தின் தவிப்பினால்
செல்லப் பிராணிகளை
செல்வமாய் வளர்த்தவர்களே!

கரிகாலன் கட்டளையேற்று
காரியம் முடிக்க
தாகம் சொல்லித்தான்
தானே வெடித்த கரும்புலிகளே!

கீதம் பாடும் அலைகளை
கிழித்துக் கொண்டு-எதிரிகளை
கிறங்கடிக்க
சீறிப்பாய்ந்த கடற்புலிகளே!

மழையும் மண்ணும் சங்கமிக்கும்
வாசனை நுகர்ந்து
ஓங்கி உயர்ந்த பனைமரத்தில்
உதட்டு முத்தம் பதித்து
மண்ணை நேசித்த
மாவீரர்கள் நீங்களே!

மண்ணின் மானத்தை காக்க
துச்சமென உயிரை
மாய்த்துக் கொண்ட
மறவர்கள் நீங்களே!

அன்னை மண்ணுக்கு
அபிடேகம் செய்ய
சுத்த குருதி சிந்தி
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கத் துடித்தவர்கள் நீங்களே!

பச்சை தமிழினமே!சுதந்திரத்தின்
பசிதனை யாம் உணர்ந்தோம்
உரிமையை மீட்டெடுக்க
உயிரை வீசி எறிந்தோம்

உன்னை புழுவாய் நினைத்துத்தானே
உன்னை துண்டு துண்டாக்கினான்
ஒவ்வொரு துண்டும்
ஒவ்வொரு உயிராய்
விருட்சமடையும் என்பதை காட்டுவோம்