இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

கேணல்.பரிதி


















சுதந்திர தேசம் காண
சுறுசுறுப்பாய் இயங்கி
குண்டுக்கு இலக்காகி
குருதி சிந்திய பரிதி

அஞ்சா புலி வீரா!
ஐயா நடராசா
ஐயோவென அழவிட்டு
இராசா மறைந்தீரே

உருகித் தவிகின்றோம்
உன் இறப்பு வாட்டுதய்யா

குள்ளநரிகளின் சூழ்ச்சியிலே
குண்டு மழையில்
குளித்தாயே ராசா

ஆடி பேரலையே
அடங்கி போனதய்யா
களத்தை கண்டவனே
கண்ணீர் பெருகுதய்யா

தேசங்கடந்து நீ
தேசத்திற்காய் உழைத்தாயே
தென்னை இளங்கீற்றும்
தேம்பி அழுகுதய்யா

சுண்டியிழுக்கும் கண்ணழகா
சுதந்திர பசியோடு
சுற்றித் திரிந்தாயே

வீழ்ந்தது புல்லல்ல
ஆலமரம் தான்
நிலத்தின் தளபதிதான்
புலத்தின் புலிதான்

வீழ்ந்தவரெல்லாம்
விதை போட்டே
வீழ்ந்துள்ளன
விருட்சமடைவோமே

உள்ளத்தை வேகவிட்டு
அழுது தொலைத்துவிட்டு
அடக்கம் செய்து விட்டுப் போவோமா?

வீரா! நீ எங்களை
விட்டு போனது சோகமே
வீறுகொண்டு எழுகிறது தாகமே

உதிர்ந்தவனின் எண்ணம்
மலருவது திண்ணம்