இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

அதை அறுத்து எறியுங்கள்















சப்தம் இல்லாமல் 
சஞ்சரித்து, 
சபலை ஒருத்தியை 
சல்லடை ஆக்கிவிட்டு, 
சந்தோசமாக போகிறான்...!!

உடல் வலுவால் 
உள்ளுக்குள் வைத்துப் பூட்டி விட்டு, 
பூப் போன்ற தேகமெல்லாம் 
புண்ணாக ஆக்கி விட்டு, 
புறவாசல் வழியாக போகிறான்...!!

பித்தனொருவன்
பிறந்த கோலமாக்கி, 
என் கற்பை களங்கப்படுத்தி
எந்துருச்சு போகிறான்...!!

மங்கையர் வாழ்வுதனில் 
மாசற்ற மல்லிகைச்சரமாய் 
இருந்த என்னை, 
மானத்தை கெடுத்து விட்டுச் செல்கிறான்...!!

கன்னிமாடத்திலே-என் 
கற்பைச் சூறையாடி,
காமுகன் செல்கிறான்...!!

ஆசைத் தீயினால்
அபலை ஒருத்தியின் 
கற்பைச் சுட்டுவிட்டு செல்கிறான்...!!

கற்பிழந்து 
கண்ணீருடன் நிற்கிறேன்...!!

பூப்பெய்த அன்றே 
புத்திமதி சொல்லி, 
"பத்திரமடி" என்று 
சொல்லி வைத்தாள்
என் அன்னை...!!

கன்னத்தைக் கிள்ளி
கண்ணடித்த அன்றே, 
அவனது கைகளை 
வெட்டாமல் 
விட்டுவிட்டேன்...!!

எனது கனவுகளைக்
கருக்கி, 
கன்னித் கழித்தவனை
தேடுங்கள்...!!

நடத்தை தவறாமல் 
வாழ்ந்து வந்த என்னை, 
வயிற்றை நிறைத்து விட்டு, 
வஞ்சித்து போனவனைத்
தேடுங்கள்...!!

மதன நீரை சிந்தவிட்டு, 
காமத் தீயை அணைத்தவனை
தேடுங்கள்... 
கணவனாக்க அல்ல..!!!

ஆனந்தப்பட்டுக் கொண்டு 
அழுங்காமல் போனவனை,
அவன் உடம்பிலிருந்து 
அவ்வுறுப்புதனை 
அடியோடு அகற்றிவிடுங்கள்...!!

பெண்மையை எச்சமிட்டு சென்ற 
அவனது குறிதனை 
வெட்டு எறியுங்கள்...!!

காக்கைக் குஞ்சு ஒன்றை 
கதறக் கற்பழித்த 
காம வெறியன் குஞ்சுதனை
வெட்டி எறியுங்கள்...!!

ஆசை தீர
ஆண்மையைக் காட்டிவிட்டு, 
அஞ்சாமற் சென்றவனை 
இழுத்துப் பிடித்து 
அறுத்து எறியுங்கள்...!!

ஆமாம்!! 
மதன நீர் கக்கிய 
அவனது உறுப்பில் 
இனி 
இரத்தம் வடியட்டும்...

பல பெண்களின் 
கற்புக் களவு போவது 
காப்பாற்றப்படட்டும்...

இத்தனை காலம் 
கட்டிக் காத்த கற்பு 
இப்போது பறிபோனதே... 
இனி மாலையிட 
எவன் வருவான்...?

ஐயோ!! 
முல்லைக் கொடி ஒன்று 
முறைதவறிப் போனதென்று 
முள்வார்த்தை பேசுவார்களே...!

மானம் போன 
வாழ்க்கை வேண்டாம்...!!

சித்திர குப்தா எனது 
சித்தம் கலங்குவதற்குள்
சீக்கிரம் மாண்டு 
போக ஆசைப்படுகிறேன்...
வீட்டுக்கு வா, 
விருந்து வைக்கிறேன்... 
விதியை மாற்றி எழுது...!!

எமனே வா 
என்னைத் தேடி...! 
கையூட்டுத் தருகிறேன் 
கையோடு என்னை 
அழைத்துச் செல்...!!