இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

கும்மி பாட்டு




















கும்மியடி புள்ள கும்மியடி
குனுஞ்சு நிமிந்து கும்மியடி

காந்தள் பூ புள்ள பூத்திருச்சு
கார்த்திக மாசம் பொறந்திருச்சு
கல்லற குஞ்சுகள்
கண்கள் திறந்திட
கண்ணீர தொடச்சு கும்மியடி

தலைவன் பேர சொல்லியடி
தமிழீழம் பொறக்கும் நம்புங்கடி
ஈகைச்சுடரிங்கு எரியுதடி
ஈழம் பொறப்பத சொல்லுதடி

மல்லிக பூ புள்ள பூத்திருச்சு
மாலய தொடுத்து வாருங்கடி
மண்ண நாமும் மீட்டிடுவோம்
மானம் போற்றிக் காத்திடுவோம்

நீ வீட்ட பாக்கும் புள்ளயல்ல
நாட்ட காக்கும் புள்ளயடி
அடுப்பு ஊதிய பெண்களடி
ஆயுதம் தூக்கி போனதடி

தெருவுல நாமும் எறங்கிடுவோம்
தேசிய கொடியத் தூக்கிடுவோம்
அடுத்தவன் தேசத்துல பொறந்தவளே
தேசம் விடியனும் வாருங்கடி

பொத்தி காத்த குஞ்சுகள -அடி
கழுகு வந்து தூக்குவதோ?
காத்திருக்க நேரமில்ல -அடி
களமிறங்க வாருமடி

காட பயலுக ஆளுவதோ -அடி
காலுல விழுந்து வாழுவதோ?
காத்திருந்தது போதுமடி
காரியம் கூடணும் வாருமடி

பாட்டன் ஆண்ட பூமியடி
பறிகொடுத்து போவதுவோ?
படுத்திருந்தது போதுமடி
படக்குனு எழுந்து வாருமடி

தென்ன பாள(ளை) விட்டுருக்கு -அடி
தேசம் விடிவத சொல்லிருக்கு
தேம்பி அழுதது போதுமடி
தேசம் காண்போம் வாருமடி

கும்மியடி புள்ள கும்மியடி
குனுஞ்சு நிமிந்து கும்மியடி