இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

தொலைதூரத்துக் காதலி






















அடுத்தவன் தேசத்தில் பிறந்தும்
அழகாக தமிழ்பேசி
அடியேனை அடிமையாக்கி
இதயக் கூட்டினுள்
இழுத்துப் பூட்டிக் கொண்டவளே

உன்னை நீள பேசவிட்டு
அதற்கு இடை இடையே
“உம்” போடும் சுகமே
தனிச்சுகம் தான்

சிரிப்பா அது?
சிணுங்களா அது?
சீர்குலைய வைக்குதடி
சிக்கித் தவிக்க செய்யுதடி

தூரத்தில் இருந்து கொண்டு
தூக்கத்தை கெடுக்கும் கொசுவே
உனக்கு பகலென்றாலும்
எனக்கு இரவும் பகல்தானடி

உற்றவனிடம் பேச
பெற்றவனின் தடைமீறி
“மாமா...” என்றழைத்து
மதி மயக்கும் குரலே

உன் அப்பன் மீதுள்ள
பயம் கூட -உன்
குரல் தரும் தைரியத்தில்
படுத்துறங்கச் சென்றுவிடுகிறது

கண் இமைப்பதற்குள்
காதலியைத் தூக்கி
வந்துவிடுவேன் என்று
சொல்லி வையடி
அந்தச் சண்டியரிடம்

கடல் கடந்த காதலியே
காத்திருக்கிறேன் - என்
வாழ்க்கையில் மறந்தும்
நாட்டியமாடி விடாதே! -எனக்கு
கல்லறை கட்டி விடாதே