இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

வீர(ஈழ)த்தாயின் தாலாட்டு




















தாலாட்டு நான் பாடி
தாய்பாலு ஊட்டுறேனடி-கண்ணே
தாய்நாடு விடிய வேணுமடி
தங்கமே நீ வளர்ந்து கிளம்படியோ

ஊரெல்லாம் இராணுவந்தான் -அடி
உள்ளமெல்லாம் நோகுதுதான் -கண்ணே
உன்பாட்டன் ஆண்ட மண்ணடியோ
உன்வீரம் காட்ட கிளம்படியோ

சாக்கோளம் பூண்டு -அடி
சமர்க்களம் செய்த மண்ணடியோ-கண்ணே
தரித்திரத்தை நீவிரட்டி
சரித்திரத்தை படைக்க கிளம்படியோ

பத்துமாசம் உனை சுமந்தனடி-அடி
பல ஆண்டு உனை ஈழத்தாய் சுமப்பாளடி-கண்ணே
தமிழீழத்தாய் அன்னியனிடம் வாடுகிறாள்
தாய்மண்ணை மீட்டெடுக்க கிளம்படியோ

அமைதியான சூழலிலே-அடி
ஆத்தா உனை பெக்கவில்லை-கண்ணே
ஊற்றுக்கண்கள நீதுடைக்க
உடனே நீ கிளம்படியோ

சீவித் தலமுடுஞ்சி-அடி
சிங்காரிக்க நேரமில்லை-கண்ணே
திமிரி நீயெழுந்து
தீயாக கிளம்படியோ

காடப்பய கையிழுப்பான் -அடி
காமம் தீர்க்க அவனினைப்பான் -கண்ணே நீ
விடுதலைப்புலி பெத்த பிள்ளையடி-அவன்
விளா எலும்ப முறித்துவிடடியோ

அடிப்பாங்கரைய கட்டியழ-அடி
ஆத்தா பொறக்கவில்லை-கண்ணே
ஆயுதத்த நானேந்தி
அஞ்சாமல் போனேனடியோ

தேசத்தின் நிலைகண்டு
தேம்பியழத் தோணுதடி-கண்ணே
தெக்கிப்பக்க வெறியனுக்கு
தேக்கிவச்ச கோவத்த காட்டடியோ