இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

சாகா மரமடா!














விடுதலைப் புலிகளுக்குத் தடையா?
போட்டுக் கொள்
எங்களுக்கெதிரான சட்டமா?
இயற்றிக் கொள்
என்னவேண்டுமென்றாலும்
செய்து கொள்
எம்தமிழ் மக்கள்
ஆழமாகத்தான் நேசிப்பார்கள்
விடுதலைப் புலிகளை

சொல்லிவிட்டுப் போ 
தீவிரவாதியென
சொல்லிவிட்டுப் போ
பயங்கரவாதியென
சொல்லிவிட்டுப் போ
பிரிவினைவாதிகளென
சொல்லிவிட்டுப் போ
எதுவேண்டுமென்றாலும்
ஆனால்-எம்
விடுதலை வீரர்களே
விடுதலைப் புலிகளென
வீரியத்தோடு உரைப்போம்

பயங்கரவாதிகளென சொல்ல-அட
பரதேசியே! நீ யார்?
நான் சொல்கிறேன்
தேசிய இனங்களை அடிமையாக்கி
தேசம் கண்ட நீயல்லவோ
பயங்கரவாதி! தீவிரவாதி!

உறக்கத்தோடு சேர்ந்து
கலைந்துவிட்டுப் போவதோ
எங்கள் இலட்சியக் கனவு?
எல்லாம் முடிந்ததென
தீயடங்கிப் போவதோ
எங்கள் விடுதலைப் போராட்டம்?

சாகா மரமடா-எங்கள்
சாத்வீகப் போராட்டம்
அதன் ஆணிவேர்
உலகத்தமிழர்களின்
உள்ளத்தில் பதிந்துள்ளது
நீ கிளைகளை வெட்டலாம்
தளிர்விட்டு ஓங்கி மீண்டும்
வளர்ந்துகொண்டுதானிருக்கும்

என் நெஞ்செலும் புடைத்து
இதயத்தின் இயக்கத்தைப் பாரடா
ஈழம் விடியுமென்றே
இயங்கிக் கொண்டிருக்குமடா

என்
ஆர்டிகிள் அறைகளை
அறுத்துப் பார்
வென்ட்ரிகிள் அறைகளை
வெட்டிப் பார்
அவ்வறைகளில்-எம்
விடுதலை வீரர்களாகிய

விடுதலைப் புலிகளே குடியிருப்பர்

வெட்டுங்கள்
துண்டுதுண்டாய் வெட்டுங்கள்
உடலை துண்டுதுண்டாய் 
கூட வெட்டுங்கள்
சிதறி விழுந்த -என்
விரல் கூட
விடுதலைப்புலிகளின்
வீரம் பாடி எழுதத்
துடித்துக் கொண்டு தானிருக்கும்