இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

காமராசாவே















கை கொஞ்சம் நீண்டவரே!
கல்விக் கண் திறந்தவரே!
கர்ம வீரரே-எங்கள்
காமராசரே!

தமிழ் மண்மீது
காலம் வரைந்த
கரிக்கொட்டை சித்திரமே!

பின்வரும் சந்ததிகள்
விருட்சமடைய வேண்டுமென்றே
விதை போட்டு சென்றவரே!

தலைமுறைக்கு சொத்து சேர்த்த
தலைவர்களின் மத்தியில்
தகரப் பெட்டிக்குள்
புத்தகம் சேர்த்தவரே!

பஞ்சனைக்கு வாய்ப்பிருந்தும்
பாய் போதும் என்றவரே!
பதவி தேடி வந்ததுமே
படிப்பு குறைவு என்றவரே!

சாதித்த தலைவன் நீ
சாதிய தலைவனாக்கிக் கொண்டார்களே
சாதிக்குப் பிறந்தவர்கள்!

எங்கள் வாழ்க்கைக்கு
வழிவகுத்து வித்திட்ட
உமை நாங்கள்
இனிதே கொண்டாடுகிறோம்
இனிதே கொண்டாடுகிறோம்!