இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

சாதியமே! சாதியமே!





















தமிழனை மதத்தால் பிரித்தான்
சாதி வைத்து துண்டு துண்டாக்கினான்
சாதித்த தலைவர்களையெல்லாம்
சாதிய தலைவனாக்கிக் கொண்டு
சாதிய பெருமை பீத்திக் கொண்டான்

சாதியால் உயர்ந்தவனோ
எனக்கிது அங்கீகாரம் என்றான்!
தாழ்ந்தவனோ போராடினான்
இட ஒதுக்கீடு,சலுகை எனமட்டுமே!

மொத்தத்தில் சாதியை விட்டுதர
எவனுமிங்கு தயாரில்லை

சாதியால் தாழ்ந்தவனின்
சந்ததிகள் உயர்ந்திடவே
சலுகை,இட ஒதுக்கீடு என்பவாம்!
அவ்வாறெனில் அரசே!
காட்டுங்களேன் பார்ப்போம்
நீங்கள் உயர்த்திவிட்டவர்களை!

திருமண அட்டைகளில் கூட
மணமக்கள் பெயரை விட்டு
அவர்களின் பாட்டன்,பூட்டன்
பெயர்களை தேடுகிறான்!
அவர்களின் வரலாற்றை அறிய
இவனுக்கு அத்தனை ஆசைகளோ?
இல்லை! இல்லை!
அவர்களின் சாதியை 
அறிய வேண்டுமாம்!

இருந்தது போதும் சாதியனாய்
இருப்போமே இனி தமிழனாய்

சாதி இல்லையென
தமிழர்கள் நாங்களென
அரசு கையளித்த
சாதிச் சான்றிதழை
பொசுக்கி சாம்பலிட
பலத்த துணிவோடு
ஒன்றாக வாருங்களேன்!

அழைப்பில் மக்கள் மட்டுமின்றி
அந்நாள் இந்நாள் முதல்வர்களும்
அடக்கம் ஆவீர்களோ?
இதில் காட்டுங்களேன்
உங்கள் ஒற்றுமையை!
இதில் காட்டுங்களேன்
மக்கள் மீதுள்ள பற்றை!
இதில் காட்டுங்களேன்
உங்கள் துணிவை!

இதில் துணிவில்லையெனில்
இவர்களை நம்பும் தமிழினமே
இனிமேல் நம்புவதெனில்
நட்டநடு வீதியில்
நாண்டு கொண்டு தானடா
நாமெல்லாம் சாக வேண்டும்.