இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

துப்புவேன்


நாங்கள் கும்பிட்ட தெய்வங்களே
எங்கட சனம் சாகயில
எங்கடா போனீர்கள்?

ஒடுக்கி அழிப்பட்ட மக்களை காக்க
அவதாரம் எடுத்த அவதார வெங்காயங்களே!
எமது மக்கள் அழிக்கப்பட்ட போது
எங்கடா ஊர் மேய போனீர்கள்?

இனி எந்த கடவுள் 
கண்முன் வந்தாலும்
காரித்துப்புவேன்.
இருந்தால் தானே அந்த நாய் வருவதற்கு?