இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

என்னடா நியாயம் இது?


தமிழ் தேசியம் பற்றி பேசுபவனும் வரலாற்றை எடுத்து கொண்டு பேசுகிறான்

திராவிடம் பற்றி பேசுபவனும் வரலாற்றை எடுத்து கொண்டு பேசுகிறான்

சாதியை பற்றி பேசுபவனும் வரலாற்றை எடுத்து கொண்டு பேசுகிறான்

ஆனால் கடவுளை பற்றி பேசும் போது மட்டும் புராணத்தை எடுத்து கொண்டு பேசுகிறான்..
என்னடா நியாயம் இது?

இல்லாத கடவுளை ஒழிக்காமல்
இருக்கின்ற சாதியை ஒழிக்க முடியாது

தொழலை வைத்து மட்டும் தான் சாதிய கட்டமைப்பு உருவாக்கப் பட்டது என்று சில கபோதிகள் பிதற்றுகின்றன.

அப்படி என்றால் பாப்பனர் அல்லோதோர் எல்லா கோவில்களிலும் அர்ச்சகர் ஆக முடியுமா?

இல்லையென்றால் பாப்பனர்கள் குடிகார தெய்வங்களாகிய மதுரை வீரன்,அய்யனார்,அந்த கருப்பு,இந்த கருப்பு ஆகிய தெய்வங்களையும்,
நமது உடலை வருத்தச் சொல்லி அதில் சுகம் காணும் தெய்வங்களாகி அந்த ஆத்தா,இந்த ஆத்தா போன்ற தெய்வங்களை வழிபடுவானா?

ஆலயத்தில் மணியாட்டுபவன்
அடிமைகள் நீங்களடாவென
அமைதியாய் இருக்கின்றான்

ஆனால் இங்கு பலரும்
அடிமையில் உயர்ந்தவன் நானெனவும்
அடிமையில் தாழ்ந்தவன் நீயெனவும்
அடித்துக் கொள்கின்றான்