இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

தமிழக அரசியல்வாதிகளே!
















உயர்ந்த கொள்கைகளை
உயர்த்தி பிடித்து வருகின்றீர்
பின்பு ஏனடா
பின்வாங்கி செல்கின்றீர்

தேர்தல் வேளையில்
தேடிவந்து பிச்சை கேட்கின்றீர்
தேர்தல் முடிந்ததும்
தெருவிறங்கி பிச்சை கேட்க வைக்கின்றீர்

காலமெல்லாம் தமிழ்சாதி
எத்தனை நாட்கள் தெருவிறங்கி
கட்சிக் கொடியேந்தி
நாய்போல் கத்திக் கொண்டிருக்கும்?
ஆயுதம் ஏந்தினால் தான்
அஞ்சி அடங்கிப் போவீர்களோ?

மேடை மீதேறி கத்துகின்றீர்
மெச்சிப் புகழ் பாட
மேனியுருக உழைத்த
எங்கள் பணத்தில்
விழா எடுத்துக் கொள்கின்றீர்

”இலங்கை தமிழன்” என்றழைத்த
நாறத் திருவாய்களுக்கு
தேர்தல் வேளையில்தான்
ஈழத்தமிழன் புகுந்தான்

ஈழத்தமிழன் என்று சொல்லி
ஈவு இரக்கமின்றி -அரசியல்
நாடகங்களை நடத்தி
நாதாரிகளாகிப் போனீர்

எங்களினம் வாட
எங்கிழவன்
எங்கனம் டெல்லி விதவைக்கு
காதல் கடிதங்களை
கரைந்துருகி வடித்து அனுப்பினீரோ?

கலவும் களவும்
கற்றறிந்து
காலம் முடியும் வேளையிலும்
நாற்காலியில் அமர்ந்து
நாட்டை ஆழ துடிக்கின்றீர்

அறிஞரெனப் போற்றி
அடிக்கல் பல நாட்டி
அடியோடு சுரண்டி
அடாவடித் தனத்தோடு
அபகரிப்புச் செய்கின்றீர்

ஏழையென நாங்களிருக்க
எள்ளளவும் வெக்கமின்றி
ஏழு தலைமுறைக்கு
சொத்துச் சேர்த்தது ஏனோ?

தோழியோடு சேர்ந்திருந்து
”சோ”ர்வின்றி எமையாட்டி
தீயாக எழும்போதெல்லாம்
தீர்மானம் போட்டு
அணைத்துவிட்டீர்
அடக்கிவிட்டீர்

சகோதர யுத்தமென்று
சவடால் பேசினீர்
எமது தமிழினத்திற்கு
ஒன்றாக சேர்ந்து
ஒருமேடையில் தோன்றுங்களேன்
அதில் தெரிந்திடுமே
அரசியல்வாதிகளின் யோக்கிதை