இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

திருமண வாழ்த்து


















பந்தலிட்டு பந்திபோட்டு
பாசத்தை பரிமாறி
பட்டு ஆடை கட்டி
சுற்றம் உறவு கூட்டி
பாசக் கயிறு கட்டி
மணப்பெண் கழுத்து நீட்டி
மாங்கல்ய திருப்பூட்டி
மகிழ்ச்சி உண்டாகுகவே!

இருமனம் சேர்ந்து
திருமணம் பூண்டு
நறுமணம் வீசி
மகிழ்வாய் வாழ்கவே!

சலிப்பு முகம் காணாது
பாலை நிலம் காணாது
மருதம் நிலம் தந்த
மாலையென
மகிழ்வோடு வாழ்கவே!

வாடா மல்லிகையின்
வாசனையோடும்
சிவப்பு ரோசாவின்
சிரிப்புக்களோடும்
சிறந்து விளங்கி
வாழ்க வாழ்கவே!

கார்த்திகை மலரில் கலந்த
இருநிறமாய் அறம் புறத்தில்
இரண்டற கலந்து
இருவரும் இணைந்து
இன்பமாய் வாழ்கவே!

ஐந்து விரல் கூட்டி
ஒருவிரல் தான் நீட்டி
கவ்விய மோதிரமாய்
காலம் முழுவதும் வாழ்கவே!

செல்லக் கோபங்கொண்டு
செல்வச் செழிப்புக் கண்டு
வாழ்விடம் சேராயினும்
வாழ்க்கையைச் செந்தாமரையாக்கி
வாழ்க வாழ்கவே!

பதினாறு செல்வங்களாகிய
கலையாத கல்வியும்,
குறையாத வயதும்,
கபடு வராத நட்பும்,
குன்றாத வளமையும்,
குன்றாத இளமையும்,
கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும்,
அன்பு அகலாத மனைவியும்,
தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும்,
மாறாத வார்த்தையும்,
தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும்,
கோணாத கோலும்,
துன்பம் இல்லாத வாழ்வும்,
துய்ய நின் பாதத்தில் அன்பும்,
பெற்று வாழ்க வாழ்கவே..