ஆண்டுக்கு ஒருமுறைமட்டும் கூடி
தீபம் கொளுத்திவிட்டு
அழுது தொலைத்துவிட்டு
அடுத்த வேலைக்குச் செல்வதுவோ?
முள்ளிவாய்காலுடன்
முடிந்து போனதுவென
முடங்கிப் போவதோ?
வீரச்சாவடைந்த -எம்
வீரமறவர்களுக்கு
விரித்துக் கைகாட்டிவிட்டு
வீட்டில் முடங்கி கிடப்பதுவோ?
தாயக உறவுகளை
வாடி வதங்கவிட்டு
நாடுகடந்து நாமிங்கு
உண்டு கழித்து
உறங்கித் தொலைப்பதுவோ?
இத்த இனமென
செத்து போங்களென
தன் போக்கில்
தறிகெட்டுப் போவதுவோ?
வரலாறு நமக்களித்த
வரலாற்றுப் பொறுப்புதனை
காற்றில் பறக்கவிட்டு
ஒன்றாக ஒன்றுகூடக் கூட
ஒரு காரணம் கண்டுபிடித்து
ஓரம்கட்டிச் செல்வதுவோ?
இது சரிதானா?
முறைதானா?
நியாயம்தானா?
உங்களுக்குள் ஒருமுறை
கேட்டு பாருங்கள்
சர்வதேசத்துடன் பேசும்முன்
சகோதர்களிடம் பேசுங்கள்
வெட்டிக் கெளரவத்தை விட்டுவிடு
வேலையில் முதலில் இறங்கிவிடு
அமைப்புகளே ஒன்று சேர்க
அதன்பின் மக்களே
அணி திரள்வர்
குறை சொல்லி
குறை சொல்லி
குடி அழிந்தது போதும்
கூடுவோம் ஒன்றாக
ஓடித் திரியும் தமிழனே
ஒன்றுமையின் பலத்தினை
எப்போது நீ அறிவாய்?
ஒன்றுபட்டு ஒன்றுகூடடா
