இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

விழியினை திறந்து விடிவினை நோக்கு






















இனத்தின் இழவடி-தோழி
பிணத்தின் குவியளடி
ஒச்சமான உடலே யிங்கு
மிச்சமாகி உயிர்தாங்கி நிக்குதடி

கோர தாண்டவம் கண்ட
கொதிப்பு அடங்களடி -இன்னும்
கொத்துக் குண்டுகளின்
கொப்பளங்கள் ஆறளடி

இனவெறியின் துவேசமடி-தோழி
சிங்கள தேசமெங்கும் வீசுதடி
கல்லறைகள் நாசமடி-தோழி
காடையன் தோலுரிக்க தோணுதடி

தங்கி வாழ்ந்த இடம்
தறப்பாள் ஆனதடி-தோழி
தறப்பாளும் எரிந்து
தரையோடு போனதடி

தமிழரின் தங்கத்திருமேனிகள்
தாய்மண் வயிற்றுக்குள் போனதடி-தோழி
இருந்தும் தமிழீழ இலட்சிய நெருப்பு
இன்னும் அணையாது எரியுதடி

எதிரி தமிழனை கத்தரித்தானடி
உலகம் நம்மை சித்தரித்தானடி
நம் விடுதலை வீரர்களை-தோழி
தீவிரவாதியென சித்தரித்தானடி

புலத்தில் பிறந்த புலியே
தேசிய கொடியேந்தி-தோழி
தெருவிறங்கி வாருமடி
தேசம் காண்போம் நாளையடி

கண்ணுக்குள்ளே நெருப்பை தைத்து
கட்டிலிலே புரளாதடி-தோழி
விழியினை திறந்து- நீ
விடிவினை நோக்கடி

விடுதலையென்னும் தீப்பொறி யொன்றை
இதயக்கூட்டினில் வைத்து-அடி தோழி
இமை மூடுவதென்பது சாத்தியமா?
விழியினை திறந்து-தோழி
விடிவினை நோக்கடி