தன்னானே தானெனன்னே
தன்னென்னே நானே
தானே தன்னேதன்னே நானே
தானானே நானே நானே
தானெதென்னே நானே
தமிழீழம் மலரவேணும்
அடிங்களடி கும்மி-அடி
அடிங்களடி கும்மி
(தன்னானே)
நாட்டுப்புற பாட்டெடுத்து
நாட்டப் பத்தி பாடு -அடி
நாட்டப் பத்தி பாடு
எல்லாரும் சேந்துதானே
இழுக்க வேணும் தேரு
இழுக்க வேணும் தேரு
(தன்னானே)
புலிவீரர் புகழ்பாடி
அடிங்களடி கும்மி-அடி
அடிங்களடி கும்மி
(தன்னானே)
கார்த்திக மாசமாச்சு
காந்தள் மலர எடுங்க-அடி
காந்தள் மலர எடுங்கள்
காவக்காத்த தெய்வங்களை
கல்லறையில் தொழுங்க-அடி
கல்லறையில் தொழுங்க
(தன்னானே)
தேசம் விடியுமென்று
அடிங்களடி கும்மி-அடி
அடிங்களடி கும்மி
(தன்னானே)
தேசங்காத்த வீரர்களை
தெய்வமாக வணங்கு-நீ
தெய்வமாக வணங்கு
தேம்பிவழுத விட்டுப்புட்டு
தேசங்காண கிளம்பு -அடி
தேசங்காண கிளம்பு
(தன்னானே)
தலைவன் பேர சொல்லிச்சொல்லி
அடிங்களடி கும்மி-அடி
அடிங்களடி கும்மி
(தன்னானே)
தனித்தனியாய் நீயிருந்து
என்ன செய்தாய் கூறு-நீ
என்ன செய்தாய் கூறு
துண்டுதுண்டா கிடக்காம
ஒத்துமையா போராடு-அடி
ஒத்துமையா போராடு
(தன்னானே)
தெக்கித்தியான் நடுநடுங்க
அடிங்களடி கும்மி-அடி
அடிங்களடி கும்மி
(தன்னானே)
தூங்கித்தூங்கி நீயெழுந்தால்
தமிழர் நிலையென்ன?-அடி
தமிழர் நிலையென்ன?
வீதிவந்து போராடு
விடியுமடி கண்ணே-தேசம்
விடியுமடி கண்ணே
(தன்னானே)
விடுதலையின் தாகங்கொண்டு
அடிங்களடி கும்மி-அடி
அடிங்களடி கும்மி
(தன்னானே)
பாட்டன் ஆண்ட நிலம்
பறிபோகுதடி பாரு -அடி
பறிபோகுதடி பாரு
பகல்தூக்கம் நீ போட்டால்
கிடைத்திடுமா நாடு -அடி
கிடைத்திடுமா நாடு
(தன்னானே)
இழந்த நிலம் மீட்க வேணும்
அடிங்களடி கும்மி-அடி
அடிங்களடி கும்மி
(தன்னானே)
தமிழன் ஆண்டு வெளஞ்ச
நிலம் ஆகுதடி தருசு-அடி
ஆகுதடி தருசு
ஓசயின்றி கதறுதடி
ஒலகத்தமிழர் மனசு
ஒலக்த்தமிழர் மனசு
(தன்னானே)
போராட்டம் வெடிக்க வேணும்
அடிங்களடி கும்மி-அடி
அடிங்களடி கும்மி
(தன்னானே)
ஊரெழுவில் பொறந்தவனின்
பார்த்திபனின் ஆச-அடி
பார்த்திபனின் ஆச
இடி இடித்து கேட்குதடி
அவனின் தாக ஓச
அவனின் தாக ஓச
(தன்னானே)
ஐநாவும் அதிரவேணும்
அடிங்களடி கும்மி-அடி
அடிங்களடி கும்மி
(தன்னானே)
ஒற்றையாட்சி என்று சொல்லி
ஒளறுவத நிறுத்து-அடேய்
ஒளறுவத நிறுத்து
தமிழீழம் மலரவேணும்
வாக்கெடுப்ப நடத்து
வாக்கெடுப்ப நடத்து
(தன்னானே)