நீ வாழ வேண்டியது
தன்மானத்துடனா?
வெட்டி கெளரவத்துடனா?
இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை
விளங்கி கொள்ளடா தமிழா
நீ எப்படி வாழ வேண்டும்
பெருமையுடனா?
தற்பெருமையுடனா?
சிந்தித்து உணர்ந்து
விளங்கி கொள்ளடா தமிழா
நீ வீரமுடன் வாழ
ஆட்பலத்திற்கும்
மனோபலத்திற்கும் உள்ள வலிமைதனை
விளங்கி கொள்ளடா தமிழா
நீ நாவடக்கத்தோடு வாழ
வீண் பேச்சுக்கும்
விவாதத்துக்கும் இடையேயுள்ள
வித்தியாசத்தை
விளங்கி கொள்ளடா தமிழா
நீ முதலில் அழிக்க வேண்டியது
துரோகியையா?
எதிரியையா?
விளங்கி கொள்ளடா தமிழா
விடுதலை தாகங்கொண்டு வாழ
வீம்புக்காரனுக்கும்
விடுதலை வீரனுக்கும் உள்ள
வித்தியாசத்தை
விளங்கி கொள்ளடா தமிழா
நமக்குள்ளே அடித்து கொள்கிறோம்
வீரப் போருக்கும்
வீண் சண்டைக்கும் இடையேயுள்ள
வித்தியாசத்தை
விளங்கி கொள்ளடா தமிழா
வரலாறுதான் வழிகாட்டி என்று சொன்ன
வரலாற்றுப் புதல்வனை பெற்றவர்கள் நாம்
புனையப்பட்ட புராணத்துக்கும்
வாழப்பட்ட வரலாற்றுக்கும்
இடையேயுள்ள வேறுபாட்டை
விளங்கி கொள்ளடா தமிழா
துண்டுதுண்டாய் கிடக்காமல்
ஒவ்வொருவனுக்கும்
ஒற்றுமைக்கும் உள்ள பலத்தை
விளங்கி கொள்ளடா தமிழா
துண்டுதுண்டாய் இருந்தது போதுமடா
ஒன்று சேரடா - தமிழா நீ
ஒன்று சேரடா