தலுக்கடி அரிசியிலே
ஆக்கி பொங்கயிலே
நாற்றம் மூக்கைத் தொலைத்திடுமே
பசி தின்ன அழைத்திடுமே
பப்பாளிக் காயினிலே
விரல்நகம் பட்டதிலே-அது
கன்னி கழிஞ்சிடுதோ-இல்லை
காரித் துப்பிடுதோ
கரட்டுக் காட்டினிலே
காராம் பழமிருக்க
மறுமாத்தம் கெடச்சுருச்சே
வயிறு நெறஞ்சுருச்சே
கத்தாழஞ் செடியினிலே
பழுத்த பழமிருக்க-அது
வயித்த நெறச்சுடுதே
ஒதடு செவப்பா செவந்துடுதே
கடனா கம்பு வாங்கி
உரலுல போட்டிடுச்சு
பொடச்சு எடுக்கையிலே
மழை வந்து சேந்துடுச்சு
அடுப்பாங்கற நனஞ்சுருச்சு
ஊரவச்ச பச்சரிசி
களையெடுப்பு காட்டினிலே
கச்சேரி நடத்திடுமே
கெண்டக்காலுத் தண்ணியிலே
கெளித்தி மீனு புடிக்கையிலே
பாம்பு கடிச்சிருச்சு- பொழப்பு
பாழாய் போயிருச்சு!
காய்ச்ச வந்து படுத்தா
கஞ்சி கச்ச ஆளிருக்கு
காரியம் ஆகலேன்னா
காரித்துப்பவும் ஆளிருக்கு
கம்பங் காட்டினிலே
களவாங்க போரையிலே-காடை
கத்தி தொலைத்திடுதே
காட்டிக் கொடுத்திடுதே
கம்மாகர நெறயலையே
காடுகர வெளயலையே
பஞ்சம் வந்த வேளையிலே
கொட்டிக்கெழங்கு தோண்டி
தின்ன கத மறக்கலையே
குல சாமி கோயிலிலே
நேந்து விட்ட கெடா வெட்டையிலே
பாட்டில் சாராயம் பக்கத்தில இல்லேனா!
கோவுச்சுகிருமே எங்கூரு பண்பாடு
குடிக்க கஞ்சி இல்லாதவகளுக்கு
கூழு காச்சி ஊத்திடனும்!
குல சாமி இருக்குதுல
குடி காக்க வேணுமுல