இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

பலகாரப் பாசம்















வெற்றிலை உடலில் 
ஒரு உறுப்பை 
ஒச்சமாக்கி 
கடுகடுப்பு சத்தம் வைத்து 
எண்ணெய் பதம் பார்த்து 
சுட்டெடுக்கும் பலகாரம்...

ஜீவநதியே அடக்கமாகும் 
ஜிலேபி...

எள்ளை கொண்டு 
கரும்புலி செம்புலி குத்திய 
கச்சாயம்...

விரல் ஈட்டியில் சொருகிய விதம், 
வாய் நடத்தும் 
வதைபடலம் 
உளுந்த வடைக்கு...

வயதானவர்களை 
வம்புக்கு இழுக்கும் 
சீடை... 

பலகாரத்தின் 
காம மழையில் நனையும் 
காகிதங்கள்...

ஆசையாய்
அத்தை மகள்
ஊட்டிவிடும் 
அதிரசம்...

மஞ்சள் தேய்த்து 
குளித்த 
குமரியை போன்ற 
லட்டு... 
அதில் சிவந்த 
உதடுகளை போல 
உலர்ந்த திராட்சை... 

சிவனேனு இருக்கும் 
சித்தர்களையும் 
சீண்டி பார்க்கும் 
சிகிர்தண்டா, 
தொட்டாலே 
சிணுங்கிக் கொண்டு 
நீலிக்கண்ணீர் வடிக்குமே...

பக்குவமாய் 
பார்த்து பார்த்து 
செய்து வைத்த
பால்கோவாவை, 
பார்த்தாலே பரவசம்.. 
நினைத்தாலே நீரோடையில்
எச்சில் வெள்ளம்...

முறுக்கு மீசை 
வளர்க்க ஆசை
என்ன செய்வது..??
முகத்தில் முடிகளின் 
முன்னுக்கு பின்னான 
முரண்பாடு.. 
பரவாயில்லை, 
முறுக்குக் கொண்டு வாருங்கள்...

கொளுத்துங்கள்,
உணர்ச்சி மத்தாப்புடன் 
உண்மை தீபங்களையும் சேர்த்து...

வெடியுங்கள், 
வெடிகளுடன் 
கஷ்டங்களையும் சேர்த்து...