இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

என்னோடு கலந்துவிடு






















உன் கொலுசுகள் 
மட்டும் தான் 
என்னை அழைக்கிறது
நீயோ சிலுத்து கொண்டு 
போகிறாயே?
ஓ!என்மேல் 
செல்ல கோபமா?

உன் காதுகளில் 
தோடுகள் மட்டும் தானா ஆடுகிறது?
என் உயிரும் அல்லவா 
சேர்ந்து ஊசலாடுகிறது

முகத்தின் முன்னால்
தொங்கும் முடிகளை 
உனது கைவிரல் 
ஏன் துடுப்பு போட்டு
பின்னோக்கி தள்ளுகிறது?

கழுத்தில் தொங்கும் ஆபரணத்தை
ஏன் செல்லக்கடி கடித்து 
அழ வைக்கிறாய்?
ஓ!உன்னை 
தொடக்கூடாத இடத்தில 
தீண்டிவிட்டதா?

அழகின் மொத்த வரைபடமே!
உன்னை எந்த கோணத்தில் 
நான் பார்த்து ரசிப்பது?

உன் உடைக்குள் 
சிக்கிய இடையால்
தினமும் 
போர்வைக்குள் போர்தானடி

உனது மெல்லிய இதழ்கள் 
அசையும் போது
எனது கைகுட்டையும் 
நனைந்து விடுகிறது 
வடியும் எச்சிலால்

நீ விட்ட மூச்சில் 
காற்றில் கலந்த 
அந்த கரியமிலா வாயுவை 
கையில் பிடித்து 
பொட்டிலுக்குள் அடைக்க 
துடிக்கிறேன்

உன் கூந்தலை கோதும் 
நினைப்போடு 
மண்ணை கிண்டிக் கொண்டு 
இருக்கிறேன் 

உன்னால் தனிமையில் 
முணுமுணுத்துக் கொண்டு 
இருக்கிறேன்

அடி பெண்ணே!
கண்ணை தொலைத்து 
உன்னை தேடுகிறேன்

உனது பின்கழுத்தில் 
எனது விரல்கள் 
சறுக்கி விளையாட வேண்டும்

எள்ளளவும் தாமதிக்காமல் 
எண்ணியபடி 
என்னோடு கலந்துவிடு