இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

ஈனப்பிறவி அல்லடா
















இனப்படுகொலையை
இரக்கமின்றி
இறுமாப்புடன் செய்தவனே!

மூர்க்கத்தனத்தோடு
அரக்கத்தனத்தோடு
அழிவுதனை செய்தவனே!

நீ செய்த போர்முறையை
வீரமென்று சொல்லாதே!
உண்மை நிலையோடு
உன்மனதோடு பேசிப்பார்
உனக்கே கூசுமடா!

மாவீரர்கள் துயிலும் இல்லத்தை
மட்டமாக நினைத்து
மட்டப்படுத்தியவனே-எங்கள்
மனதில் ஏற்றிய சுடரை
மறக்கடிக்க முடியாதடா

மக்கள் பல இழந்தோம்
மண்ணையும் இழந்தோம்
மகிந்தாவே! இன்னும்
மானம் இழக்கவில்லையடா

தாயக நிலத்தில்
எம்முறவுகள் கதறிய கதறலை
எங்கள் செவிகள் மறந்துவிடவில்லை

ஒன்றாக கூடுவோம்
ஒப்பாரி வைக்க அல்ல.
ஓங்கி அடித்து-உன்னை
ஓட விரட்ட

தமிழீழ தாகம் அடங்கிவிடவில்லை
தமிழீழ கனவுகள் அகன்றுவிடவில்லை
விரைவில் விண்ணை முட்டும்
விடுதலைப்பண் பாடுவோமடா!

தேசமெல்லாம் சென்றாலும்
தெருவெல்லாம் கதைப்போம்!
தேடிவந்து உதைப்போம்!

உலகமெல்லாம் சுத்துவோம்!
ஊரறிய கத்துவோம்
தமிழீழம் எங்கள் உயிரென்று

உலகம் செவிடாய் இருந்தாலும்
சங்கை ஊதிக் கொண்டு தானிருப்போம்
சாவை குறித்துக் கொள்ளடா

கக்கும் கனலோடு
கர்சனை செய்து வருவோமடா
காடைப் பிறவியே -உன்
காலம் முடித்து வைப்போமடா

அழித்தவனை கண்டு
இழித்துக் கொண்டு போக
ஈனப்பிறவி அல்லடா நாங்கள்

ஈழம்தனை மீட்க
இடிபோல் தாக்க
இந்நுயிரை வீசும் புலிகளடா